/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகார் பெட்டி: தெரு நாய்கள் தொல்லை
/
புகார் பெட்டி: தெரு நாய்கள் தொல்லை
ADDED : டிச 31, 2025 03:25 AM
தெரு நாய்கள் தொல்லை முதலியார்பேட்டை போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு. வேகத்தடை தேவை உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்தசாலை பாரதிபுரம், புதுநகர், மாரியம்மன் கோவில் தெருவில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
ஏழுமலை, உருளையன்பேட்டை. போக்குவரத்து பாதிப்பு உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து, மீன் விற்பனை செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மதிவாணன், உப்பளம். பயணியர் நிழற்குடை தேவை தவளக்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயில் மற்றும் மழையில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
கண்ணகி, தவளக்குப்பம். டூவீலர்களால் இடையூறு பழைய பஸ் நிலையம், மார்கெட் பகுதியில், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பாஸ்கரன், புதுச்சேரி.

