/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகார் பெட்டி: போக்குவரத்து இடையூறு
/
புகார் பெட்டி: போக்குவரத்து இடையூறு
ADDED : ஏப் 17, 2026 07:04 PM

நாவற்குளம் அன்னிபெசன்ட் நகர், மாரியம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
நாகராஜ், நாவற்குளம்.
தெரு நாய்கள் தொல்லை.
மோதிலால் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ரமணி, மோதிலால் நகர்.
வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு
மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து நடந்து வருகிறது.
கிருஷ்ணன், மரப்பாலம்.
கொசு தொல்லை
தேங்காய்திட்டு பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால், மருந்து அடிக்க வேண்டும்.
சரவணன், தேங்காய்த்திட்டு.
சாலை படுமோசம்
காமராஜ் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சரவணன், புதுச்சேரி.
ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பரமசிவம், வில்லியனுார்.

