நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னல் பழுது
இந்திரா சதுக்கத்தில் சிக்னல் விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.
முகேஷ்,புதுச்சேரி.
தொடரும் வாகன நெரிசல்
கடலுார் சாலை முருங்கப்பாக்கத்தில் குடிநீர் குழாய் மற்றும் மின்சார கேபிள்கள் புதைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
கந்தன்,முருங்கப்பாக்கம்.
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை
அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.
மணிகண்டன், தவளக்குப்பம்.
வாகன ஓட்டிகள் அவதி
முதலியார்பேட்டையில் இருந்து உப்பளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணி,உப்பளம்.