நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை வசந்த நகரில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
தினேஷ், முதலியார்பேட்டை.
ஹைமாஸ் விளக்கு எரியவில்லை
தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் இரவில் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் வாகன விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது.
பரத், தவளக்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
முருங்கப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுரேஷ், முருங்கப்பாக்கம்.
குண்டும் குழியுமான சாலை
தேங்காய்த்திட்டு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மகேஸ்வரி, தேங்காய்த்திட்டு.