நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து இடையூறு
நெல்லிதோப்பில் தற்காலிகமாக இயங்கி வரும் மீன் மார்கெட்டில் மீன் வாங்க வருபவர்கள் சாலையிலேயே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
ரவி,நெல்லித்தோப்பு.
நாய்கள் தொல்லை
முதலியார்பேட்டை, பாரதிதாசன் நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சபாபதி,முதலியார்பேட்டை.
ைஹமாஸ் எரியுமா?
அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பக்குளம் அருகே பல மாதங்களாக ைஹமாஸ் விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் அப்பகுதியில் வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.
பிரகாஷ்,அபிேஷகப்பாக்கம்.
வாகன ஓட்டிகள் அவதி
உப்பளம் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கணேஷ்,உப்பளம்.