நகர் பகுதியில் மாசு
வெங்கடேஸ்வரா நகர் 3வது குறுக்கு தெருவில் கருங்கல் உடைக்கும் வேலை செய்வதால் குடியிருக்கும் பகுதியில் புழுதி ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் மாசு ஏற்பட்டு வருகிறது.
கணேஷ், வெங்கடேஸ்வரா நகர்.
மின் விளக்கு எரியவில்லை
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பக்குளம் பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதால் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.
அங்குமுத்து, சுதானாநகர்.
மின் விபத்து அபாயம்
ஏம்பலம் பூங்காவனம் நகரில் உயர் மின் அழுத்தம் செல்லும் மின் கம்பத்தில் மரம் விழுந்து கிடப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
பாலகிருஷ்ணன், ஏம்பலம்.
பேனரால் பாதிப்பு
இந்திராகாந்தி சிக்னலில் பேனர்கள் வைத்துள்ளதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குஞ்சிதபாதம், கதிர்காமம்.

