ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில், தெப்பக்குளம் அருகே உள்ள ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் இப்பகுதியில் விபத்துக்கள் நடந்து வருகிறது.
குமார்,தவளக்குப்பம்.
இடையூறாக உள்ள மரம்
பாகூர், பிள்ளயைார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இடையூராக உள்ள ஆலமரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உமாசங்கர்,பாகூர்.
நடை பாதை ஆக்கிரமிப்பு
நேருவீதி, நடை பாதையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் நடந்து செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணசேகரன்,நேருவீதி.
தொற்று நோய் அபாயம்
ரெட்டியார்பாளையம், பொன் நகரில் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மகேஷ்,ரெட்டியார்பாளையம்.
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
உப்பளம் நேதாஜி நகர் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
ஜோசப், உப்பளம்.
சாலை பணி கிடப்பில்
ரெட்டியார்பாளையம், சுதாகர் நகரில் சாலைப் பணிகளை பாதியில் நிறுத்தி வைத்துள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
சத்தியமூர்த்தி,ரெட்டியார்பாளையம்.
கொசுத் தொல்லை
வில்லியனுார், கோட்டைமேடு மாரியம்மன் கோவில் தெருவில் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பாதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
துளசி,வில்லியனுார்.

