வேகத் தடையால் அபாயம்
புதுச்சேரி சட்டசபைக்கு பின்புறம் புதிதாக வேகத்தடை( ஸ்பீடு பிரேக்) அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில், வேகத்தடை மீது பெயிண்ட் அடிக்காததால் விபத்துகள் நடந்து வருகிறது.
கலியமுருகன், வில்லியனுார்
கழிவுநீர் தேக்கம்
வாழைக்குளம் குபேர் பாடசாலை தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
கல்யாணம், ராஜ்பவன்.
குண்டும் குழியுமான சாலை
மண்ணாடிப்பட்டு சந்தை புதுக்குப்பம் பகுதியில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜெயராஜ்,மண்ணாடிப்பட்டு.
உறுவையாறில் இருந்து மங்கலம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன.
காந்தி,புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
வில்லியனுார், புதுநகர் கனுவாப்பேட்டை பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் செல்லும் மக்கள் அச்சமடைகின்றனர்.
முத்துகிருஷ்ணன்,வில்லியனுார்.
வேகத்தடை தேவை
தவளக்குப்பத்தில் இருந்து கோர்காடு செல்லும் சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
முருகானந்தம்,தவளக்குப்பம்.

