மதுரையில் ரூ.213 கோடியில் கட்டிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மதுரையில் ரூ.213 கோடியில் கட்டிய மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
UPDATED : பிப் 16, 2026 07:03 PM
ADDED : பிப் 16, 2026 07:00 PM

சென்னை: மதுரையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலம் என்று பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவின் விவரம் வருமாறு;
நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது திராவிட மாடலில், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள தேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்.
தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணாத்துரை சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கென பாதையை உருவாக்கி, நம் தென் மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.
ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21ம் தேதி என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

