நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகில் உள்ள ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
மதி,தவளக்குப்பம்.
விதி மீறும் வாகனங்கள்
ராஜிவ் சிக்னலில் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
சாந்தி,காந்தி நகர்.
விளையாட்டு வீரர்கள் அவதி
இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடிநீர் இல்லாமல் விளையாட்டு வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவபாரதி, புதுச்சேரி.
விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
கதிர்காமம், தட்சிணாமூர்த்தி நகர், 5வது குறுக்கு தெருவில், உள்ள காலிமனைகளில் புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
பாலசுப்ரமணியன்,கதிர்காமம்.

