
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன ஓட்டிகள் அவதி
தட்டாஞ்சாவடி இ.சி.ஆர்., சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வசந்தி,தட்டாஞ்சாவடி.
கழிவுநீர் தேக்கம்
நெல்லித்தோப்பு அண்ணா நகர், 6வது குறுக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி சாலையில் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
சாந்தி, நெல்லித்தோப்பு.
விபத்து அபாயம்
முத்தியால்பேட்டை அம்பேத்கர் நகர் 2வது குறுக்கு தெருவில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் போடாமல் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
விமல்ராஜ்,முத்தியால்பேட்டை.
விளக்கு எரியவில்லை
பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில், தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில் இருண்டு கிடக்கிறது.
முருகன்,பிள்ளையார்குப்பம்.

