நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்கிரமிப்பால் இடையூறு
வில்லியனுார் தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூராக உள்ளது.
மகேஷ்,வில்லியனுார்.
சாலையில் கழிவுநீர் தேக்கம்
தட்டாஞ்சாவடி மோகன் நகரில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.
வெங்கட், தட்டாஞ்சாவடி.
சுகாதார சீர்கேடு
லாஸ்பேட்டை குமரன் நகரில் 5வது குறுக்கு தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கணேஷ், லாஸ்பேட்டை.
குண்டும் குழியுமான சாலை
தவளக்குப்பம் அண்ணா நகரில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முருகவேல்,தவளக்குப்பம்.

