இரவு நேர பஸ் சேவை நிறுத்தம்
புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு வழியாக கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள்இரவு 9:00 மணிக்கு பிறகு இயக்குவதில்லை.
சிவசுப்ரமணியன், வடமங்கலம்.
ஆபத்தான நிலையில் மின் கம்பி
கொம்பாக்கம், கும்பம்பேட் மாரியம்மன் கோவில் தெருவில் மின்சாரம் செல்லும் மின் கம்பிகள், கம்பத்தில் ஆபத்தான நிலையில் கட்டி வைத்துள்ளனர்.
ஆறுமுகம், கொம்பாக்கம்.
லிப்ட் பழுது
காந்தி வீதி அமுதசுரபி கட்டடத்தில் லிப்ட் பழுதாகி கிடப்பதால், 3வது மாடியில் உள்ள வங்கிக்கு மூத்த குடிமக்கள் படிக்கட்டுகள் வழியாக ஏறி செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தர்மலிங்கம், புதுச்சேரி.-----------------------------------------------------------------------------
காலிமனையில் குப்பை
வேல்ராம்பட்டு, ஆதிமூலம் நகர் 2வது குறுக்கு தெருவில் காலிமனைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர், வேல்ராம்பட்டு.
----------------------------------------------------------சாலை மோசம்
உப்பளம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கணேஷ், உப்பளம்.
நாய் தொல்லை
தவளக்குப்பம் அண்ணா நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.
முகேஷ், தவளக்குப்பம்.
-------------------------------------------------------------------------பாலத்தில் மின் விளக்கு எரியவில்லை
நோணாங்குப்பம் ஆற்று பாலம் மின் கம்பத்தில் உள்ள சில மின்விளக்குகள் எரியாமல் இருக்கிறது.
ரமணா, நோணாங்குப்பம்.

