நாய்கள் தொல்லை அண்ணா நகர் மெயின் ரோட்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ராஜா, அண்ணா நகர். ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் கம்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பால்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தேவன், மோரிசான் தோட்டம். கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நெல்லித்தோப்பு - புவன்கரே சாலை சந்திப்பில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குமரேசன், நெல்லித்தோப்பு. அரசு மருத்துவமனை சாலை மோசம் அரசு பொது மருத்துவமனை எதிரே சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கண்ணன், புதுச்சேரி. மின் விளக்குகள் எரியவில்லை கல்மண்டபம் - பண்டசோழநல்லுார் செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியவில்லை. விஜயகுமார், பண்டசோழநல்லுார். இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு கரியமாணிக்கம், குடிநீர் உந்து நிலையம் அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குமார், கரியமாணிக்கம்.