குப்பைகள் கொட்டுவதால் சீர்கேடு அரும்பார்த்தபுரம் பைபாசில், குப்பைகளை கொட்டி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ராஜ்குமார், வில்லியனுார். வாய்க்காலில் செடி கொடிகள் காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் வாய்க்காலில் செடி, கொடிகள் முளைத்துள்ளதால், கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது.
முருகன், ரெயின்போ நகர். சாலை படு மோசம் மேட்டுப்பாளையம் தொழிற்சாலை ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சரோஜா, மேட்டுப்பாளையம். மின்கம்பியை உரசும் மரக்கிளை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், கற்பக விநாயகர் கோவில் தெருவில், மரக்கிளைகளில் மின் கம்பிகள் உரசி செல்வதால், விபத்து ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்புசாமி, குறிஞ்சி நகர். சாலையில் மீன் வியாபாரம் உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், கடும் போக்குவரத்து நெரிசலில், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கதிரேசன், உப்பளம்.

