
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் சாலையில் பேனர்கள் புதுச்சேரி - கடலுார் சாலையில் இருபுறங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரவன், புதுச்சேரி. குப்பைகள் தேக்கம் திருபுவனை பாளையம் பகுதியில் குப்பை வண்டி சரியாக வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
திருநாவுக்கரசு, திருபுவனை. கழிவுநீர் தேக்கம் காமராஜர் நகர் தொகுதி, எழில் நகர், ஐயனார் கோவில் தெருவில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கியுள்ளது.
தமிழரசி, புதுச்சேரி. தெரு விளக்கு எரியுமா? நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர், முதல் மெயின்ரோட்டில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
செல்வன், நைனார்மண்டபம். சுகாதார சீர்கேடு மூலக்குளம், அன்னை தெரேசா நகரில் குப்பைகள் எடுக்காமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
ரட்சகன், அன்னை தெரேசா நகர்.

