
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடுகளால் இடையூறு லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
சிவகுமார், லாஸ்பேட்டை. கழிவுநீர் தேங்கி நிற்கிறது நெல்லித்தோப்பு, புவன்கரே வீதி சந்திப்பில் சாலையோரத்தில் கழிவு நீர் தேங்கி சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ராஜேஷ், நெல்லித்தோப்பு மின் விளக்கு எரியுமா? ரெட்டியார்பாளையம், கனகன் ஏரியில் இருந்து புதுநகர் செல்லும் சாலையில் மின்விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
சுபா, புதுநகர். நகரில் மழைநீர் தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால் குடியிருப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வடிவேலன், தவளக்குப்பம். பயணியர் நிழற்குடை தேவை உறுவையாறு கீதா ராம் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.
வீரமணி, உறுவையாறு.

