
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் சாலை மோசம் அரியாங்குப்பம் முதல் கிருமாம்பாக்கம் வரை சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண்ணன், புதுச்சேரி.
மின் விளக்கு எரியுமா? ரெட்டியார்பாளையம் சாலையில் சில இடங்களில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ராஜ்குமார், ரெட்டியார்பாளையம். மெகா பள்ளம் கோரிமேடு செல்லும் சாலையில் ராஜிவ் சதுக்கம் அருகே மெகா பள்ளம் உள்ளதால், விபத்து ஏற்பட்டு வருகிறது. ரவிக்குமார், புதுச்சேரி.
சிதறி கிடக்கும் குப்பை தவளக்குப்பம், ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் சிதறி கிடக்கிறது. மணிவண்ணன், தவளக்குப்பம். குண்டும் குழியுமாக சாலை நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாந்தி, மரப்பாலம்.

