வாய்க்கால் சேதம் காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் மெயின்ரோடு 3வது குறுக்கு தெருவில் வாய்க்கால் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
முருகன், ரெயின்போ நகர். ஆக்கிரமிப்பால் இடையூறு லாஸ்பேட்டை அவ்வை நகர் 16வது குறுக்கு தெருவில், ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராஜன், லாஸ்பேட்டை. ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ராணி, புதுச்சேரி. சாலை மோசம் பூமியான்பேட்டை செல்லும் குண்டுசாலை மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மாதவன், குண்டுசாலை. மின்விளக்கு எரியவில்லை ரெட்டியார்பாளையம் சரவணா நகர் 4வது தெருவில், மின்விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
அலெக்ஸ், ரெட்டியார்பாளையம். சாலையோர கடைகளால் இடையூறு புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் அருகில், சாலையோர கடைகளால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
ஸ்ரீனிவாசன், பாலாஜி நகர்.

