
'குடிமகன்'களால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி - கோரிமேடு சாலையில் அமர்ந்து மது குடிப்பதால், அவ்வழியே செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பாஸ்கர், தட்டாஞ்சாவடி. சாலை படுமோசம் தவளக்குப்பம், ஸ்ரீஅரவிந்தர் நகரில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மகேஷ், தவளக்குப்பம். மீன் கடைகளால் நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ராதிகா, உப்பளம். போலீசார் நியமிக்க வேண்டும் தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை செல்லும் சந்திப்பில், வாகன நெரிசல் ஏற்படுவதால், போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும். வீரப்பன், தட்டாஞ்சாவடி. தெரு நாய்கள் தொல்லை நெல்லித்தோப்பு பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கலைவாணன், நெல்லித்தோப்பு.

