sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரை

/

 சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரை

 சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரை

 சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : ஜன 05, 2026 04:29 AM

Google News

ADDED : ஜன 05, 2026 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, நேற்று அதிகாலை, பாதயாத்திரை திருக்கோவிலுார் ஸ்ரீமத் ராமானுசார்யார் சுவாமிகள், மங்களா சாசனத்துடன், புறப்பட்டது.

இதில், அமைச்சர் லட்சுமிநாராயணன், லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றத் தலைவர் இளங்கோ, பொருளாளர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, சுப்ரமணியன், கவுரவத் தலைவர்கள் பூவராகவன், ஜெயபிரகாஷ், செயலாளர்கள் முகுந்தன் விட்டல், நிர்வாகிகள் அசோகன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

பாதயாத்திரையில், புதுச்சேரி தஞ்சை தேவநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினர்களின் நாம சங்கிர்த்தனம், வில்லியனுார் கீழ் அக்கராவரம் பெரியாழ்வார் கைங்கர்ய சபை பஜனை, புதுச்சேரி குயவர்பாளையம் வணிக வைசிய ஹரிஹர பஜனை மடம், பிள்ளைத் தோட்டம் பாண்டுரங்க ஆன்மிக கைங்கரிய சபா, கவிக்குயில் நகர் வேங்கடாத்திரி பஜனை கூடம், லாஸ்பேட்டை பாண்டவதுாதன் சங்கீர்த்தன சபா மற்றும் திண்டிவனம், மரக்காணம், கடலுார், திருக்கோவிலுார், பண்ருட்டி, சேலம், புதுச்சேரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பஜனை குழுக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை, புதுச்சேரி - கடலுார் சாலை, தவளக்குப்பம் வழியாக சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலை சென்றடைந்தது.

அங்கு, திவ்ய நாம பஜனை, பிருந்தாவன பஜனை மற்றும் சிறப்பு திருமஞ்சனம், லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு நடந்தது. பெருமாள் சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us