sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தேசிய விளையாட்டு போட்டி: புதுச்சேரி மாணவி சாதனை

/

 தேசிய விளையாட்டு போட்டி: புதுச்சேரி மாணவி சாதனை

 தேசிய விளையாட்டு போட்டி: புதுச்சேரி மாணவி சாதனை

 தேசிய விளையாட்டு போட்டி: புதுச்சேரி மாணவி சாதனை


ADDED : ஜன 05, 2026 04:30 AM

Google News

ADDED : ஜன 05, 2026 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தேசிய அளவிலான பளுதுாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அருணாச்சல பிரதேசம் இட்டா நகரில், 69வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், பளுதுாக்கும் சாம்பியன்ஷிப் 2025-26ல், பிரிவில், முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியான தர்ஷினிபிரியா 44 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். அவர், ஸ்நாட்ச் பிரிவில் 57 கிலோ, க்ளீன் அன்ட் ஜெர்க் 70 கிலோ என, மொத்தமாக 127 கிலோ எடையை துாக்கி மூன்றாம் இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அகில இந்திய அளவிலான போட்டியில் மாணவி தர்ஷினிபிரியா வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது புதுச்சேரிக்கும், அவரது பள்ளிக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

அவரது இந்த சாதனை, பள்ளி மாணவியர்களிடையே விளையாட்டுத் துறையில் புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

சாதனை மாணவி தர்ஷினிபிரியாவுக்கு, பள்ளி முதல்வர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா, துணை முதல்வர் கலியமூர்த்தி, வகுப்பு ஆசிரியை மரி எஸ்தர் மற்றும் ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us