ADDED : ஜூலை 27, 2026 02:23 AM
பள்ளியில் ஆபத்தான மரம்
முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் தெரு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரம் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
சம்பந்தம், முத்தியால்பேட்டை.
சாலையில் ஆக்கிரமிப்பு
திலாசுபேட்டை சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேன்மொழி, திலாசுபேட்டை.
குடிமகன்களால் மக்கள் அச்சம்
நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பழைய பாலத்தில் இரவில் மது குடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கவிச்செல்வன், நோணாங்குப்பம்.
சாலை படுமோசம்
லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ராஜன், லாஸ்பேட்டை.
போக்குவரத்து இடையூறு மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறாக உள்ளது.
முருகேசன், மரப்பாலம். டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாரதி, புதுச்சேரி.
