ADDED : ஆக 03, 2026 03:46 AM
நடைபாதை ஆக்கிரமிப்பு
நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து இந்திரா சதுக்கம் வரை நடைபாதையை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரவி, புதுச்சேரி.
டவுன் பஸ் தேவை
தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாததால் மரப்பாலத்தில் இருந்து மாணவர்கள் நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.
கோமதி, தேங்காய்த்திட்டு.
சாலையில் மீன் கடைகள்
உப்பளம் சாலையில் 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மோகன், புதுச்சேரி.
சாலையில் ஆக்கிரமிப்பு
திலாசுபேட்டை சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேன்மொழி, திலாசுபேட்டை.
வாகன நெரிசல்
காமராஜ் சாலையில் வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பிரகாஷ், பிருந்தாவனம்.
தெரு நாய்கள் தொல்லை
கருவடிகுப்பம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்மணி, கருவடிகுப்பம்.
சாலை படுமோசம்
இ.சி.ஆர்., குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், லாஸ்பேட்டை.
