ADDED : செப் 01, 2026 07:31 PM
பயணியர் நிழற்குடை தேவை
ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் – புதுநகர் இடையில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் அவதியடைந்து வருகின்றனர்.
சந்திரசேகரன், ரெட்டியார்பாளையம்.
கழிநீர் தேங்கியுள்ளது
காமராஜர் நகர் தொகுதி, சுந்தரமூர்த்தி நகர், 2வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
லலிதாகுமாரி, புதுச்சேரி.
நடைபாதை ஆக்கிரமிப்பு
புதுச்சேரி நடைபாதைகளை கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
செல்வம், நைனார்மண்டபம்.
மின் விளக்கு எரியுமா?
அரும்பார்த்தபும் புதிய பைபாஸ் சாலை சென்டர் மீடியனில் சில இடங்களில் மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளது.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
தெரு நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
செல்வம், தட்டாஞ்சாவடி.
