ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி படிப்பிற்கு சேர்க்கை
ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி படிப்பிற்கு சேர்க்கை
ADDED : செப் 01, 2026 07:22 PM
புதுச்சேரி: ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி படிப்பிற்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் பெற்ற ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி வளாகத்தில், 2026-–27 ம் கல்வியாண்டிற்கான எம்.எஸ்சி., சைபர் செக்யூரிட்டி மற்றும் டிஜிட்டல் பாரன்சிக்ஸ் படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்படிப்பு 2 ஆண்டுகள் 4 பருவங்களுடைது. இப்படிப்பில் மொத்த இடங்கள் 20 இடங்கள் மட்டுமே உள்ளன. கல்வி கட்டணம் ஆண்டிற்கு ரூ. 82,500.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் , கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஐ.சி.டி., இ.சி., ஆகிய துறைகளில் பி.இ., அல்லது பி.டெக் படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி., ஐ.டி., சி.எஸ்., எலெக்ட்ரானிக்ஸ், பி.சி.ஏ., அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும், காஷ்மீரி புலம்பெயர்ந்த விண்ணப்பதாரர்கள் 40 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்:
இப்படிப்பில் தியரி மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் காவல் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று பார்க்கும் வாய்ப்புகள் இப்பாடத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு 0413-2633988 அல்லது 97908 26882 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலோ அல்லது py.ao@rru.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு rru.ac.in/puducherry-campus என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
