தென்மண்டல இறகுபந்து போட்டி புதுச்சேரி மாநில அணி தேர்வு
தென்மண்டல இறகுபந்து போட்டி புதுச்சேரி மாநில அணி தேர்வு
ADDED : செப் 01, 2026 07:21 PM
புதுச்சேரி: தென்மண்டல இறகுபந்து போட்டியில் பங்கேற்க புதுச்சேரி மாநில அணி தேர்வு இன்றும் நாளையும் நடக்கின்றது.
பெங்களூருவில் வரும் 5 முதல் 8ம் தேதி வரை 80வது தென்மண்டலங்களுக்கு இடையிலான இறகுபந்து (பேட்மிண்டன்) போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் பங்கேற்கும் அணியைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகள், இன்று 2 மற்றும் நாளை 3ம் தேதிகளில் நடக்கிறது.
புதுச்சேரி நுாறடி சாலை, ராகவேந்திரா நகர், 3-வது குறுக்குத் தெரு எக்ஸ்டென்ஷனில் உள்ள சுமாஷ் பேட்மிண்டன் கிளப்பில் காலை 9:00 மணிக்கு தேர்வுப் போட்டிகள் துவங்கும். இப்போட்டிகளின் மூலம் 19 வயதிற்குட்பட்டோர் மற்றும் சீனியர் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளுக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இம்முகாமில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வழிகாட்டுதலுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்ககம், பி.கே.சி. கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி என்ற முகவரியில் நேரடியாக அணுகலாம். அல்லது ddsys@dsepdy.edu.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும், 82487 43533, 75985 00555 ஆகிய வாட்ஸ் ஆப் எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்ககம் சார்பில், இந்திய இறகுபந்து சங்கம் இணைந்து இந்த தேர்வு முகாமினை நடத்துகின்றன.
