ADDED : செப் 14, 2026 06:03 PM
: டவுன் பஸ் தேவை: புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காந்திமதி, புதுச்சேரி.
––––––––––––––––––––––––––––––––––––
தெரு நாய்கள் தொல்லை : புதுச்சேரி காந்தி வீதியில் தெரு நாய்கள் சாலையில் சுற்றிதிரிவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராமமூர்த்தி, புதுச்சேரி.
–––––––––––––––––––––––––––––––––––––––––––––
பயணிகள் நிழற்குடை தேவை: தவளக்குப்பத்தில் பயணிகள் நிழல்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், தவளக்குப்பம்.
–––––––––––––––––––––––––––––––––––––––––––––––
சாலை படுமோசம்: மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மாறன், மேட்டுப்பாளையம்.
––––––––––––––––––––––––––––––––––––––––
வாகன நெரிசல்: ராஜிவ் சிக்னலில் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காந்திமதி, புதுச்சேரி.
