/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயிர் உற்பத்தி மானியத்தில் முறைகேடு வேளாண் துறை மீது கவர்னருக்கு புகார்

ADDED : ஜூலை 29, 2025 07:31 AM
புதுச்சேரி : வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட பயிர் உற்பத்தி மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
புதுச்சேரி அரசு, விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மானியம் வழங்கி வருகிறது.
இதற்கு விவசாயிகள், வேளாண் அடுக்ககத்தில் பதிய வேண்டும். புதுச்சேரியில் வேளாண் அடுக்ககம் முறையாக செயல்படாததால், பயிர் உற்பத்திய மானியம் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்படவில்லை. ஆனால், வீட்டு மனையாக பிரித்து விற்கப்பட்ட நிலங்களுக்கும், கள்ளுக்கடை இயங்கி வரும் நிலத்திற்கும் உற்பத்தி மானியம் மற்றும் பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு குறித்து விசாரித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.