ADDED : அக் 01, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நில வள வங்கியில் தலைவர் எம்பெருமான் ஓய்வு பெற்றதை அடுத்து, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி உப்பளம் நில வள வங்கியில், தலைவராக பணியாற்றிய எம்பெருமான் பணி ஓய்வு பெற்றார்.
அவருக்கு நேற்று பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
விழாவில், துணைத் தலைவர் விநாயகம், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் செந்தில்நாதன், இயக்குனர்கள், கவுசல்யா, குமரவேல், ராஜசேகர் மற்றும் அனிதா உட்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.