/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வ.உ.சி., பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா
/
வ.உ.சி., பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : ஏப் 29, 2025 11:54 PM

புதுச்சேரி புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் பிரெஞ்சு விரிவுரையாளர் எட்வர்டு சார்லஸ்க்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு விரிவுரையாளர் ஜீடு அன்பழகன் வரவேற்றார். பொறுப்பாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் நிலை - 1 ஸ்ரீதர், விரிவுரையாளர் பாமா ஆகியோர் எட்வர்டு சார்லஸ்க்கும், அவரது மனைவி மரிய தெரேசா ஆகியோரை கவுரவித்தனர்.
விரிவுரையாளர்கள் கந்தசாமி, ரவிக்குமார், ராஜ்மோகன், கீதா பிரியா வாழ்த்திப் பேசினர்.
விரிவுரையாளர் எட்வர்டு சார்லஸ் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். டேவிட் போல் நன்றி கூறினார்.

