ADDED : ஆக 22, 2026 07:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டுக் குழுமத்தின் கீழ் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்ட மையம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சத்தின் மூலம் ‘காகிதக் கழிவு மறுசுழற்சி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்’ தலைப்பில் மூன்று நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கரிக்கலாம்பாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு, மையத்தின் தகவல் தெழில்நுட்ப அலுவலர் தினேஷ் வரவேற்றார். சமூக சேவை சங்கத்தின் தலைவர் சகாயமேரி, பயற்சி அமர்வுகள், செய்முறை பயிற்சிகள் மற்றம் பங்கேற்றவர்கள் பெற்ற முக்கிய கற்றல் அனுபவங்கள் குறித்து பேசினார். விழாவில், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்கேற்று, காகிதக் கழிவுகளை முறையாக மறுசுயற்சி செய்வதன் மூலம் கழிவு உருவாக்கத்தை குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை மாற்றுவதன் மூலம் பெண்கள் சுயதொழில் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
மேலும், பெண்கள் பயிற்சியின் மூலம் பெற்ற திறன்களை நடைமுறையில் பயன்படுத்தி, ‘கழிவிலிருந்து செல்வம்’ என்ற கருத்தை செயல்படுத்தும் வகையில் சிறு தொழில் மற்றும் வீட்டை அடிப்படையாக கொண்ட தொழில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காலநிலை மாற்றப் பிரிவின் திட்ட உதவியாளர் ஜெயபாரதி நன்றி கூறினார்.
