ADDED : ஜூலை 02, 2025 07:27 AM

நெட்டப்பாக்கம் : மொளப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மேலாளர் கோவிந்தராசுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வங்கி வளாகத்தில் நடந்தது.
மொளப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வங்கியில் மேலாளராக கோவிந்தராசு பணி செய்து வந்தார். இவரது பணி காலம் நேற்று 30ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா வங்கி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு, கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் பத்மகுமார், இயக்குனர்கள் முத்து, பழனிராஜா ஆகியோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில், சங்கம் ஊழியர்கள் மற்றும் யூனியன் பொது செயலாளர் வீரராகவன், வங்கி மேலாளர் செங்கேனி, கூட்டுறவு கடன் சங்கம் ஊழியர்கள் தேவிலட்சுமி, பச்சையப்பன், குணசேகரன், ரவி, முருகன், நவின்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.