ADDED : நவ 03, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு அச்சுத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய கங்காதரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் கங்காதரன்.
இவரது பணிக்காலம் முடிந்து, பணி நிறைவு பாராட்டு விழா துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம்நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதுநிலை கணக்கு அதிகாரி சாய்நாதன் தலைமை தாங்கினார்.
கண்காணிப்பாளர்கள் ெஹன்றி தாமஸ், கவுதமன், மீனா மற்றும் ஊழியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

