ADDED : ஜூலை 01, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை சாரம் பிரிவு இயக்குதல் மற்றும் பராமரிப்பு பிரிவில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்த செல்வராஜ் நேற்று பணி ஓய்வு பெற்றார்.
பணி நிறைவு பெற்ற அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது. விழாவிற்கு, மின்துறை தலைமை பொறியாளர் கனியமுதன் கலந்து கொண்டு செல்வராஜ்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில், மின்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர் திலகராஜ் மற்றும் மின்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
