ADDED : ஜூலை 01, 2026 06:14 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் சிவக்கொழுந்து ஆய்வு செய்தார்.
லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட சாந்தி நகர், பாண்டியன் வீதி, கட்டபொம்மன் வீதிகளில் பொதுப்பணித்துறை மூலம் சிமென்ட் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான சிவக்கொழுந்து பார்வையிட்டார். பின் அதிகாரிகளிடம் பணியினை உடனடியாக முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
