/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரவிந்தர் கல்லுாரியில் கணினித்துறை கருத்தரங்கு
/
அரவிந்தர் கல்லுாரியில் கணினித்துறை கருத்தரங்கு
ADDED : ஜன 10, 2026 05:21 AM

புதுச்சேரி: அரவிந்தர் கலை அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில், கருத்தரங்கு கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது.
கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் சிவசங்கரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக் கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளி கணினி அறிவியல் பேராசிரியர் சுரேஷ் ஜோசப் கலந்துகொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில், 30க்கு மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் தொழில்நுட்ப திறன், சிந்தனைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொற்கவி நன்றி கூறினார்.

