தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நில அபகரிப்புக்கு உடந்தை ராமதாஸ் கண்டனம்

நில அபகரிப்புக்கு உடந்தை ராமதாஸ் கண்டனம்

நில அபகரிப்புக்கு உடந்தை ராமதாஸ் கண்டனம்


ADDED : செப் 29, 2024 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2024 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : தனிநபரின் நில அபகரிப்புக்கு ஆதரவாக, ஒரு அரசியல் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டதால், விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ் என்பவரின் நிலத்தை தனிநபர் அபகரிக்க, ஒரு கட்சி ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, மேல்மலையனுார் தாசில்தார் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.

மக்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் அக்கட்சியினர், தனிநபர் ஒருவரின் நில அபகரிப்புக்கு ஆதரவாக களமிறங்கி, 33 வயது ஏழை விவசாயியின் தற்கொலைக்கு காரணமாகியிருப்பது கண்டிக்கத் தக்கது.

அவரது தற்கொலைக்கு காரணமான 23 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். மோகன்ராஜின் குடும்பத்தினருக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us