/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., முன்னாள் எம்.எல்.ஏ., நீல கங்காதரன் மரணம்
/
காங்., முன்னாள் எம்.எல்.ஏ., நீல கங்காதரன் மரணம்
ADDED : அக் 13, 2024 07:53 AM
புதுச்சேரி : உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரி மாநில காங்., செயல் தலைவராகவும், தலித் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்தவர் நீல கங்காதரன்,80. இவர் கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்., சார்பில், ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தம் குறைவு காரணமாக நீல கங்காதரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். நீல கங்காதரன் மறைவை யொட்டி காங்., மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது உடல் நாளை காலை 7:00 மணி முதல் 10 மணி வரை வி.வி.பி., நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர், அவரது பூர்வீக கிராமமான கோர்காடு கொண்டு செல்லப்பட்டு, மாலை 5:00 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.