ADDED : செப் 07, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
: அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து காங்., சார்பில் மின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியாங்குப்பம் பகுதியில் எந்த அறிவிப்பும் இல்லாமல் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை கண்டித்து, அரியாங்குப்பம் மின்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை 10:00 மணியளவில் காங்., மாநில செயலாளர் விஜயலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மின்துறை செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர்.
