தாகூர் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
தாகூர் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ADDED : செப் 07, 2026 11:15 PM
புதுச்சேரி: சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி, தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது.
அறிவியல் மற்றும் மனிதநேய துறை தலைவர் ரவிச்சந்திரன், வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகத்துறை உதவி பேராசிரியர் கல்பனா வரவேற்றனர். கல்லுாரி முதல்வர் ஜெய்கணேஷ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் பாடத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நிறுவனத்தின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
ஜேசிஐ இந்தியா முன்னாள் தேசிய துணைத் தலைவர் பிரபு, இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கான அறிவியலின் முக்கியத்துவம், அதில் இருக்கும் சவால்கள், வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். தலைவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசன் மாணவர்களுக்கு தற்போதிய சூழ்நிலையில் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து விளக்கினார்.
விழாவில் தாகூர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் காளியண்ணன், கல்லுாரியின் துணைத் தலைவர்கள் காளியப்பன், ரவி, இணை செயலாளர்கள் வசந்தகுமார், அருண்குமார், செல்வம், சக்திவேல், பிரபாகரன், விஜயகுமார் மற்றும் தாகூர் கல்வி குழுமத்தின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
