UPDATED : அக் 07, 2026 12:09 AM
ADDED : அக் 06, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவின்போது கை சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு சீட்டை வீசி சென்ற காங்., பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில் காங்., சார்பில் விநாயகம் போட்டியிடுகிறார். இந்நிலையில், சுப்பையா நகர் பகுதியில் உள்ள தெருக்களில், கை சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு சீட்டுகளை மர்ம நபர்கள் வீசி சென்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த டி. நகர் போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கை சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு சீட்டை வீசி சென்றது, கோவிந்த சாலை பகுதியை சேர்ந்த காங்., பிரமுகர் தினேஷ்,28, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
