UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 09:36 PM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி மின்துறை சார்பில் மின் நுகர்வோர் குறை தீர்வு முகாம், ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கரையாம்புத்துாரில் நடந்தது.
கரையாம்புத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தெருவிளக்கு, மின் கம்பம் புதிதாக அமைத்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
கூட்டத்தில் மின்துறை செயற்பொறியாளர் உமேஷ் சந்திரா, உதவி பொறியாளர் அன்பழகன், இளநிலை பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தனர்.
