தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மீன்கள் காட்சியகத்தை அரசு செயலர் ஆய்வு

மீன்கள் காட்சியகத்தை அரசு செயலர் ஆய்வு

மீன்கள் காட்சியகத்தை அரசு செயலர் ஆய்வு


UPDATED : அக் 06, 2026 10:33 PM

ADDED : அக் 06, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:33 PM ADDED : அக் 06, 2026 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தாவரவியல் பூங்காவில் இயங்கி வரும் மீன்கள் காட்சியகத்தை அரசு செயலர் மணிகண்டன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தாவரவியல் பூங்காவில் உள்ள மீன்கள் காட்சியகத்தை மேம்படுத்தி, பல்வேறு வகையான மீன்களை வளர்த்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தேங்காய்த்திட்டு கழிமுக மீன் பண்ணையை பார்வையிட்ட செயலர் மணிகண்டன், அப்பகுதியை துாய்மையாக பராமரித்து உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்த வேண்டும்.

இங்கு வளர்க்கப்படும் மீன் வகைகள் மற்றும் மீன் வளர்ப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மீன்வளத்துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி, சந்திரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us