தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து

போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து

போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து


UPDATED : அக் 06, 2026 10:31 PM

ADDED : அக் 06, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:31 PM ADDED : அக் 06, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடலுார் மாவட்டம், கோதண்டபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, இவரது உறவினரான தமிழ்செல்வன் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 2016 முதல் சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாகிய நிலையில், கருக்கலைப்பும் செய்துள்ளார்.

இதுகுறித்து கடலுார் மகளிர் போலீசில், 2019ம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். தமிழ்செல்வன் மீது, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த, கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றம், தமிழ்செல்வனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, 2022ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்செல்வன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி அருள்முருகன், 'பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்களில், பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மருத்துவப் பரிசோதனை அறிக்கையும், அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரமாக அமையவில்லை. 'போக்சோ' சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டுமெனில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், சம்பவ தேதிகள் முரண்பாடாக உள்ளன. எனவே, கடலுார் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது என கூறி, தமிழ்செல்வனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us