தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு சேதாரப்பட்டில் நள்ளிரவில் மறியல்

மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு சேதாரப்பட்டில் நள்ளிரவில் மறியல்

மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு சேதாரப்பட்டில் நள்ளிரவில் மறியல்


UPDATED : அக் 07, 2026 12:43 AM

ADDED : அக் 07, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:43 AM ADDED : அக் 07, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனூர்: சேதாரப்பட்டில் மின்சாரம் தாக்கி டிரைவர் இறந்ததற்கு நியாயம் கேட்டு, உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சேதராப்பட்டு பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் அருணகிரி, 41; டிரைவர். இவருக்கு திருமணமாகி வீரவேணி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். இவர், நேற்று இரவு 7:00 மணியளவில் பழுதான மிக்சியை கழற்றி சரி செய்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி அருணகிரி துாக்கி வீசப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அவரை, மருத்துவமனையில் சேர்க்க, ஆம்புலன்சுக்கு உறவினர்கள் போன் செய்துள்ளனர். சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் புதுச்சேரி நகர பகுதியில் இருந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அருணகிரியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் சேதராப்பட்டு நான்குமுனை சந்திப்பு புதுச்சேரி-மயிலம் சாலையில் இரவு 8:00 மணியளவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சேதராப்பட்டு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அலாவூதீன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேதராப்பட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தான் அருணகிரி இறந்தார். இதற்கு அரசு முழு போறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நேற்று நள்ளிரவு வரையில் மறியல் போராட்டம் தொடர்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us