ADDED : ஆக 20, 2026 08:01 PM
புதுச்சேரி: பா.ஜ., பிரமுகர் சாம்ராஜ் பொன்விழா பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ஜ., பிரமுகர் சாம்ராஜ் தனது 50வது பொன்விழா பிறந்த நாளை கொண்டாடடினார். அவரது பிறந்த நாளையொட்டி, உருளையன்பேட்டை பா.ஜ., சார்பில், மணக்குள விநாயகர் கோவிலில், சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சாம்ராஜிக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து, மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, பா.ஜ., என்.ஆர்.காங்., மாநில நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க., சார்பில், மாநில அமைப்பாளர் சிவா, செயற்குழு உறுப்பினர் கோபால், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த ஆட்டோ சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் தொகுதி முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
