தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜெ.இ.இ., நீட் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

ஜெ.இ.இ., நீட் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

ஜெ.இ.இ., நீட் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : அக் 17, 2026 08:08 PM

ADDED : அக் 17, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 08:08 PM ADDED : அக் 17, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான அன் அகாடமி புதுச்சேரி மையத்தின் சார்பில், ஜெ.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களை கவுரவிக்கும் வகையில், ‘ஐ.ஜி.என்.ஐ.டி.இ.2026 – எதிர்காலக் கனவுகளைச் சாதனைகளாக்குவோம்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா நடந்தது.

விழாவில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, 2026ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜிப்மர், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்த மாணவர்கள், ஜெ.இ.இ., தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இதில், வழக்கறிஞர் அருண் குமார், அன் அகாடமி கோயம்புத்துார் மற்றும் சென்னை மையங்களின் பங்காளர் நவீன் பிரபு, புதுச்சேரி மற்றும் சென்னை மையங்களின் பங்காளர் திவ்யா அருண்குமார், டாக்டர் விஜய் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

அன் அகடாமி புதுச்சேரி மைய மாணவர்களின் இச் சாதனைகள் கல்வி வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us