/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 27, 2025 04:29 AM

பாகூர்: மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அப்துல் கலாம் மக்கள் சாசன இயக்கம் சார்பில், பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடலுாரில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பயிற்சி பள்ளி மாணவிகள் வைஷ்ணவி, ஐஸ்வர்யா, ஷாஷிப்பாரதி ஆகியோர் முதல் இடத்தையும், தனேஷர், லோகேஸ்வரன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அப்துல் கலாம் மக்கள் சாசன இயக்கம் சார்பில், காட்டுக்குப்பத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில், இயக்க தலைவர் சாண்டில்யன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இளைஞரணி செயலாளர் அரவிந்தன் வாழ்த்தி பேசினார்.
தலைமை பயிற்சியாளர் ரவிந்திரன், பயிற்சியாளர் முனியப்பன் ஆகியோர் நன்றி கூறினார்.

