தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., தி.மு.க., வேட்பாளர் கடன் வாங்கப்படனர் இந்திய கம்யூ., வேட்பாளர் குற்றச்சாட்டு

காங்., தி.மு.க., வேட்பாளர் கடன் வாங்கப்படனர் இந்திய கம்யூ., வேட்பாளர் குற்றச்சாட்டு

காங்., தி.மு.க., வேட்பாளர் கடன் வாங்கப்படனர் இந்திய கம்யூ., வேட்பாளர் குற்றச்சாட்டு


ADDED : செப் 29, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 09:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: காங்,. தி.மு.க., வேட்பாளர்கள் கடன் வாங்கி நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கம்யூ., வேட்பாளர் சலீம் குற்றம்சாட்டியுள்ளார்.

தட்டாஞ்சாவடி தொகுதி வி.வி.பி., நகர் பகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளர் வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தட்டாஞ்சாவடி தொகுதியை கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் எட்டி பார்க்கவில்லை என பாதயாத்திரையில் குற்றச்சாட்டு வைத்தோம். அதற்கு முதல்வர் வருத்தம் தெரிவித்தார்.  தட்டாஞ்சாவடி புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக உள்ளது. குண்டுப்பாளையம் பகுதியில் வாய்க்கால் கட்டிமுடிக்கப்படாமல் உள்ளது. குடிநீர் குடிக்க உகந்ததாக இல்லை. மின்சாரம் குறைந்த அழுத்தத்தில் வருவதால், வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைகின்றன. மழைக்காலங்களில் இ.சி.ஆரில் இருந்து தண்ணீர் திலகர் நகரில் உட்புகுகிறது.அவ்வை நகர் ராஜாஜி நகரில் பாதாள சாக்கடையில் கழிவு நீர் வெளியேறுகிறது. ஏ.எப்.டி., மில்லில் ஜவுளிபூங்கா அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை தரலாம். தட்டாஞ்சாவடி தொகுதியில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.

என்.ஆர்.காங்., வேட்பாளர் சி.பி.ஐ., வழக்குப் பதிந்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற விசாரணயைில் குற்றம் நிருபிக்கப்பட்டு சிறை சென்றவர். காங்,. தி.மு.க., வேட்பாளர்கள் கடன் வாங்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் தி.மு.க., வேட்பாளர் கம்யூ., கட்சியில் இருக்கும் போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர். காமாட்சியம்மன் கோவில் நிலம் மீட்க நாங்கள் பேராட்டம் நடத்தினோம். கடந்த ஆட்சியில் ஊழல் காரணமாக உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த இடைத்தேர்தல் சரியான தீர்ப்பு வழங்கும்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us